ஈரோடு வடக்கு மாவட்டம் - பவானி தெற்கு ஒன்றியத்தில் இளைஞரணியின் சார்பாக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, 600 பள்ளிக் குழந்தைகளுக்கு மாவட்டக் கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் திரு கே.பி. துரைராஜ் மற்றும் பவானி தெற்கு ஒன்றியம் துணைச் செயலாளர் திரு என்.சத்தியமூர்த்தி அவர்கள் முன்னிலையில் கல்வி உபகரணங்கள் வழங்கபட்டது.
இதில் கே ராமநாதபுரம், ஏ ராமநாதபுரம், குட்டியபாளையம், சின்னபுலியூர், பெரியபுலியூர், தயிர் பாளையம், வலையக்காரன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 600 பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் திரு. பழனிச்சாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. மங்களகிரி, ஒன்றிய நிர்வாகிகள் - திரு. கருப்பணன், திரு. மலர் விஜயன், திரு. தம்பி ராஜ்நன், திரு. நாகராஜ், திரு. முருகன் , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு. மகேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் - திரு. ஆர். கவியரசன், திரு. டி. மகேந்திரன், திரு. ஜி.கே. கவியரசு, திரு. மதன், திரு. சௌந்தர், திரு. கௌரி சங்கர் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.