ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை 02.11.2022 இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் போராட்ட கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், சட்டமன்றத்தில் இது பற்றி பேசுவதாகவும் உறுதியளித்தார்கள். நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் என். பி. பழனிச்சாமி, மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, நெசவாளர் அணி மாநில துணைத்தலைவர் ஜெகநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் சின்னதுரை, குரு. குணசேகரன், மாவட்ட பொது செயலாளர்கள் சிவகாமி மகேஸ்வரன், கே.ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் மாநில பிரச்சார பிரிவு ஏ. சரவணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம் ஐயப்பன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல், எஸ். டி. அணி மாவட்ட தலைவர் சாய் வர்ஷன், மாவட்ட பொருளாளர் சுதர்சன், கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் சக்தி சுப்பிரமணியம், ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் இ. புவனேஸ்வரி, மாவட்ட ஊடகப் பிரிவு துணைத் தலைவர் பிரகாஷ், மண்டல பொதுச் செயலாளர் பிரகாஷ் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ நேரில் சந்தித்தார்.
November 02, 2022
0