ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி செயற்குழு கூட்டம், மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி. புனிதம் ஐயப்பன் அவர்கள் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் திருமதி. உமா ரதிராஜன் அவர்கள் மற்றும் மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. கோகிலா அஜித்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.