கோபிசெட்டிபாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் நகர் மன்ற தலைவர், அவர்கள் தலைமையில் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர் வாணி ஸ்ரீ, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, பேருந்து நிலைய பொது கழிப்பறை முன்பு உலக கழிப்பறை தின விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கழிப்பறை முன்பு ஒட்டப்பட்டுள்ள QR கோடு மூலம் புகார்களை எவ்வாறு தெரிவிப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கோபியில் உலக கழிப்பறை தின கொண்டாட்டம்...
November 21, 2022
0