மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், மாவட்ட கழக பொருளாளர் திரு. ஜம்பு (எ) கே.கே.சண்முகம் மற்றும் டி.என்.பாளையம் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. எம்.சிவபாலன் அவர்கள் முன்னிலையில்
ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட
கொங்கர்பாளையம் ஊராட்சி - கொன்னக் கொடிக்கால் பகுதியை பார்வையிட்டு, வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
கொங்கர் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ஜானகி, அரசு அதிகாரிகள், ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.