ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, தாமரைப்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி கொடுமுடி வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 29.11.2022 செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்பட்டன. இப்போட்டிகளின் துவக்க விழாவிற்கு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் தலைமை தாங்கி போட்டிகளை துவக்கிவைத்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
போட்டி துவக்க விழாவிற்கு வந்தவர்களை கொடுமுடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கா.தேன்மொழி வரவேற்று பேசினார். தாமரைப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஈ.ஞானாம்பாள், தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.