நந்தா செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு துவக்கவிழா இனிதே நடைபெற்றது. இதில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் திருமதி. பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு வி. சண்முகன் அவர்கள் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் செவிலியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் செவிலியர்களின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ். ஆறுமுகம் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் கே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆர். வசந்தி ஆகியோர் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களை வாழ்த்தி வரவேற்று பேசினார்கள்.
முன்னதாக நந்தா செவிலியர் கல்லூரியின் பேராசிரியை ஏ. ஹமீதுநிஷா வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவின் நிறைவில் கல்லூரியின் ஆசிரியை எம். ஹரிப்பிரியா நன்றியுரை வழங்கினார்.