ஈரோடு வடக்கு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய திமுக மற்றும் தொண்டர் அணி சார்பாக மாநிலம் தழுவிய பெண்கள் கபாடித் திருவிழா நடைபெற்றது.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள்,
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.ஜி. வெங்கடாசலம் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் திரு எம்.சிவபாலன் அவர்களின் முன்னிலையில் பரிசுகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.