இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் சண்டை பிரிவு, கட்டா பிரிவு, ஏரோஸ்கோய் (தனித்திறமை) ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் 66 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர். முதல் பரிசு பெற்ற மாணவர்கள் டிசம்பர் 3, 4ம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் .
சிறப்பு விருந்தினர்களாக ஓம் தேசிய பசுமை இயக்கம் தலைவர் பசுமை சித்தர், தமிழ் சினிமா காமெடி நடிகர் முத்துக்காளை, பி கே ஜி எஸ் அமைப்பாளர் சரவணன், பள்ளி முதல்வர் சந்திரசேகரன் மற்றும் சிபிஎஸ்இ முதல்வர் திருமதி கவிதா சேர்மன், செயலாளர், பொருளாளர்கள் மற்றும் திரு. மாதேஸ்வரன், திரு. காந்தி, திருமதி. திவ்யா ஆகியோர் மற்றும் போட்டி நடுவர்களாக சென்சாய் சார்லி, சென்சாய் அருள்செல்வி, சென்சாய் பெரியசாமி, செம்பை மோகன், செம்பை கவின்நாத், செம்பை ஹரிஹரசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.