இந்த காரணத்திற்காக அவர் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து கொடூரமாக தாக்கி நீதிமன்ற காவலில் இருந்தபொழுது நீதிமன்ற அனுமதியோடு நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கை கால்களை உடைத்தும், தோலை உரித்து நிகழ்த்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நீதியரசர். கே. ஜி. பாலகிருஷ்ணன் அவர்களும், ஏனைய பிற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அவருக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான சிபிசிஐடி ஒசியூ வைச் சேர்ந்த A. அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு கடந்த 17.02.2014 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நஷ்ட ஈடாக ரூபாய்.15,000/- தர வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு எஸ் கே சாமி வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதை கடந்த 9 ஆண்டுகளாக முழுமையான விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 09.11.2022 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தி 15.11.2022 அன்று முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, இன்று (1.12.2022) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ரூ.15,000 தரப்பட்டுள்ளது.