ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நான்கு நாட்கள் கொண்ட மாவட்ட அளவிலான "கலைத் திருவிழா 2022" துவக்க நிகழ்ச்சி நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச். கிருஷ்ணனுண்ணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. அய்யண்ணன் அவர்கள் விழாவில் பங்கு பெற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேலும் ஸ்ரீ நந்தா அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கலை திருவிழாவில் பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திரு. இலக்குமி நரசிம்மன், ஈரோடு உதவி திட்ட அலுவலர் திரு. கோ. ராதாகிருஷ்ணன், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ச. வேல்முருகன் மற்றும் பெருந்துறை தலைமையாசிரியர் சிறப்பித்தார்கள். திரு. எஸ். அரசு ரவிச்சந்திரன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.
இத்திருவிழாவில் ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் திருமதி நவமணி கந்தசாமி சிறப்புரையாற்றினார். மூன்று நாட்கள் கொண்ட மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி எஸ். நாகரத்தினம் துவக்கி வைத்து பேருரையாற்றினார்.
முன்னதாக 14 வட்டார பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த மாவட்ட அளவிலான் போட்டிகளில் பங்கெடுக்க உள்ளார்கள். மேலும் இப்போட்டிகள் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நந்தா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு இந்து கல்வி நிலைய மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், மற்றும் 6,7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு அந்தியூர் ஐடியல் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் மாவட்ட அளவில் சுமார் 10632 மாணவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படடிருந்தது. இவர்களுடன் ஸ்ரீ திரு. எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி
அறக்கட்டளையின் செயலர்
திரு.எஸ்.திருமூர்த்தி மற்றும்
முதன்மை கல்வி அதிகாரி
முனைவர் திரு.எஸ்.ஆறுமுகம், நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் மற்றும் கல்லூரியின் முதல்வர் என். ரெங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆகியோர் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
விழாவின் முடிவில் ஈரோடு கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி ஐ.ஜோதிச்சந்திரா நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் சிறப்பாக செய்திருந்தனர்.