திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினர். புதிய கட்சியின் மாநில நிறுவனர் தலைவர் ஈ.கே.சிலம்பரசன் கட்சியின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை விளக்கி பேசினார்.
ஜனநாயகத்தை வென்றெடுப்போம், சமத்துவத்தை நிலை நாட்டுவோம், ஜாதி மத இன வேறுபாடு கடந்து ஜனாயத்துடன் மக்களை ஒன்றிணைப்பது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிப்பது, மாதத்தில் ஒரு முறை உணவளிப்பது, இலவச மருத்துவம் போன்ற செயல்களில் ஜனநாயக எழுச்சி கழகம் செயல்படும்
என கட்சியின் நிர்வாகிகள் கூறினார்கள்.
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மு.ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் மகளிரணி செயலாளர் மைதிலி ஜெயராமன்,
மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்தோஷ் குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், ஜனநாயக எழுச்சி கழக பொறுப்பாளர்கள்-
சேட்டு, மோகன், தேவி, புஷ்பராஜ், சிபி, கிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், பிரதாப், நிரஞ்சன் என பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.