பதிவாளர் கோ. இரவிகுமார் அவர்களின் முன்னிலையில், முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமி, திரைப்பட இயக்குனர் கே. பாக்கியராஜ் உள்ளிட்ட
உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் சார்பில் விருதுக்கு தேர்வானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதில் இந்திய இராணுவ வீரர்கள், தமிழ்நாடு காவல்துறையினர், தமிழ்நாடு மாநில தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மூன்று இசை வாத்தியக் குழுக்களும் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையத்தின் 15 வது ஆண்டுவிழா மற்றும் மனித உரிமைகள் தின கொடி வகுப்பு பேரணியில் கலந்து கொண்டனர். மேளதாளத்துடன் துவங்கிய பேரணி விவேகானந்தர் அரங்கம் சென்றடைந்தது. அங்கு மனித உரிமைகளை காப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, மனித உரிமைகள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மனித உரிமைகளை காக்க போராடியவர்களுக்கும், தற்போது இந்திய தேசத்தை பாதுகாத்து வரும் முப்படை வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவராலும் சக மனிதனின் உரிமைகளை காக்க நினைக்கும் அவரவர் ஒப்பற்ற தியாகம் கலந்த சேவைகளை சமூகத்தில் மென்மேலும் வளர்த்து பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.