மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 ஊராட்சிகளுக்கும் காவிரி ஆற்றில் இருந்து சுமார் 440 கோடி மதிப்பீட்டில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் சுமார் 60 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று 19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் .
நிகழ்வில் மொடக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி,
ஈஞ்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாயவன், துணைத் தலைவர் ஈஸ்வரி கணபதி, பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம், ஒன்றிய தலைவர்கள் டெக்கான் பிரகாஷ் (தெற்கு) , ரெயின்போ கணபதி (வடக்கு), ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமூர்த்தி, வினிதா, மாணிக்கம், இந்திரா, முன்னால் வார்டு உறுப்பினர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.