இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டமானது கோபிசெட்டிபாளையம் ஜீவா செட் அருகில் தனியார் வளாகத்தில் இந்துமுன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில், மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீதர் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், குறிஞ்சிசேகர், குமார், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீபாலமுருகன், சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், சுப்பிரமணி, தனுஷ்,
தமிழ்செல்வன், கார்த்திகேயன், மணிகண்டபிரபு, ஆனந்த், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் குரு.ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.