சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழா
December 13, 2022
0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் பல இடங்களில் 12.12.2022 நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு கோபி நகர ரஜினி மன்றத்தின் சார்பாக ரஜினி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதைத்தொடர்ந்து மார்க்கெட் அமைந்துள்ள ஏரி மாரியம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு அர்ச்சனை செய்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.