இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டமானது வெள்ளாளபாளையம் பிரிவு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருமண மண்டபத்தில் இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் குருசாமி, மாவட்ட பொதுசெயலாளர் ஸ்ரீதர் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. இதில் இந்துமுன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இப்பொதுக்குழு கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியில் இணைந்து இந்து சமுதாயத்திற்கு சேவையாற்றிட நகர, ஒன்றிய அளவில் புதிய பொறுப்பாளர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், குறிஞ்சி சேகர், கிருஷ்ணசாமி, குமார், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீபாலமுருகன், சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், தனுஷ், கார்த்தி, தமிழ்செல்வன், கார்த்திகேயன், மணிகண்டபிரபு, ஆனந்த், செந்தில், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் குரு.ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.