Type Here to Get Search Results !

8.16 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்களை கைப்பற்றி, சம்மந்தப்பட்ட மனுதாரர்களிடம் SP சசிமோகன் அவர்கள் இன்று வழங்கினார்...

தொலைந்துபோன சுமார் ரூ.8.16 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்களை கைப்பற்றி, 
 சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் வசம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று வழங்கினார். 
மேலும் ஈரோடு மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
2022 ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனுதாரர்கள் தங்களது
செல்போன் தொலைந்துவிட்டதாக கொடுத்த புகாரின் விபரங்கள் அடிப்படையில் மனுதாரர்களிடம் செல்போன் தொலைந்த தேதி, இடம் மற்றும் இதர பெறப்பட்டு, ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவின் மூலம் துரித நடவடிக்கை எடுத்ததின் பேரில் ரூ.8,15,996/- மதிப்புள்ள 55 செல்போன்களை கைப்பற்றி, இன்று
27.12.2022 ம் தேதி மாவட்ட
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் வசம் காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் IPS அவர்கள் வழங்கினார். 
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான
குற்றப்பிரிவு மற்றும் சைபர் குற்றப்பிரிவு ஆகியோர் கலந்து கொண்டனர். 
மேலும்  இவ்வருடத்தில் மட்டும் இதுவரை மீட்கப்பட்ட ரூ.77,86,444/- மதிப்புள்ள 528 செல்போன்கள் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ஆண்டு முதல் இதுவரை ரூ.1,01,10,560/- மதிப்புள்ள 685 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.