ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பும் இணைந்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு "சாலை பாதுகாப்பு" பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு.வி.சண்முகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு முனைவர் வி. சசி மோகன் அவர்கள் கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார். இப்பேரணியானது பெருந்துறை சாலையிலுள்ள காலிங்கராயன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வ.உ.சிதம்பரம் பூங்கா வரை சென்று முடிந்தது.
முன்னதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு. ஆர். ராஜரத்தினம் அவர்கள் பேரணியில் கலந்துக் கொண்ட மாற்று திறனாளிகள் உட்பட அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேலும் இப்பேரணியில் உயர்திரு ஆர். கேகே கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி கோதை செல்வி முன்னிலை வகித்தார்.
இப்பேரணியினை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக நிறைவு செய்திருந்தார்கள். இவர்களுடன் சேலம், கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கத்தின் தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பாக நிறைவு செய்திருந்தார்கள். பேரணியின் முடிவில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பின் மாநில செயலாளர் திரு.ஆர். தனபால் நன்றியுரை ஆற்றினார்.
பேரணியினை ஏற்பாடு செய்திருந்த தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் திரு. எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திரு. எஸ் திருமூர்த்தி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம் ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.