மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள்,
மாவட்டக் கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.ஏ.முருகன் அவர்களின் முன்னிலையில்
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி தெற்கு ஒன்றியம் - அயலூர் ஊராட்சியில் நடைபெறும் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த மேம்பாட்டுப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.