Type Here to Get Search Results !

உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையமத்தின சார்பில் பேரணி - கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஐக்கிய நாடுகள் சபையால் நேரடியாக அச்சிடப்பட்ட புத்தகங்கள்...

உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையமத்தின சார்பில் அதன் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சாமி அவர்களின் தலைமையில் 15 ஆம் ஆண்டு விழா நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 10.12.2022 அன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்க கூட்டமும் நடைபெற உள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் மற்றும் உலக மனித உரிமைகள் ஆணையம் & மீட்பு மையம் ரிப்போர்ட் என்ற இரு அகில உலக தன்னார்வ சேவை அமைப்புகளும் இந்தியா நாட்டு அத்தியாயங்களில் தங்களின் 15 ஆம் ஆண்டு விழா நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற சனிக்கிழமை அதாவது அகில உலக மனித உரிமைகள் தினமான 10.12.2022 அன்று காலை 11.00 மணிக்கு மனித இனத்தின் சக்தியை புரிய வைக்கும் விழிப்புணர்வை வளர்க்க மனித உரிமைக்காக நிற்கும் பேரணியும் ( Parade to Stand up For Human Rights), அதனை தொடர்ந்து அனைவருக்கும் நீதி, சுதந்திரம் மற்றும் தனிமனித கண்ணியம் காப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு கூட்டமும், மக்களிடம் உள்ள அளவற்ற சக்திகள் ( Enormous Power of People) என்ற தலைப்பில் கருத்தரங்கு கூட்டமும் சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. 
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் யூனிவர்சல் டிக்ளரேஷன் ஆப் ஹுயூமன் ரைட்ஸ் புத்தகம் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையால் நேரடியாக அச்சிடப்பட்ட மூன்று புத்தகங்கள் பரிசாகவும் மற்றும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள மனித உரிமைகள் விழிப்புணர்வை வளர்த்தெடுக்கும் இந்த பேரணி, உறுதிமொழி ஏற்பு மற்றும் கருத்தரங்கில் நீதித்துறை, இராணுவம், காவல்துறை, மத்திய மாநில அரசுத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் சார்பில் நடைபெறவுள்ள கருத்தரங்கு மூலம் ஒவ்வோரு மனிதனுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் என்னென்ன என்பது பற்றியும் அவை மீறப்படும் பொழுது தற்காத்து கொள்ள இருக்கும் வழிமுறைகள் பற்றியும் முழுமையாக எடுத்துக் கூறி சமூகத்தில் அனைவருக்குமான விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொதுநலன் கருதிய முயற்சியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் முன் பதிவு செய்ய  7550014444, 7550015555, 9445922210, 9487738440 ஆகிய  எண்களில் தொடர்பு கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.