ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகரத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பாக மழைநீர் சேகரிப்பு மற்றும் மரங்களை பாதுகாத்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை துவங்கி வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் திரு பி.கே.பாபு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பவானி நகர கழகச் செயலாளர் திரு பா.சீ.நாகராஜ், பவானி வடக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான திரு கே.ஏ.சேகர், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் திரு சன் சுரேஷ், நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், ரசிகர் மன்ற கண்மணிகள் திரளாக கலந்து கொண்டனர்.