இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கேேஏ செங்கோட்டையன் பேசியதாவது, திமுகவின் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு கண்டித்து அதிமுக மும்முனைப் போராட்டம் நடைபெற போகிறது, வருகின்ற ஒன்பதாம் தேதி அனைத்து பேரூராட்சிகளிலும், அதற்கு அடுத்து 13-ஆம் தேதி அனைத்து ஒன்றிய அலுவலகத்தின் முன்பு, அடுத்த 14ஆம் தேதி அனைத்து நகராட்சி பகுதிகளிலும் மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு வீட்டு வரி உயர்வு பொதுமக்களை பாதிக்கும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக அந்தந்த பேரூராட்சி தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஜி 20 மாநாட்டில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான நாம்தான் அழைக்கப்பட்டுள்ளோம் இதிலிருந்து பிரிந்து சென்ற சில தலைவர்களால் அதிமுகவுக்கு பாதி பெரும் இல்லை என செங்கோட்டையன் கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னால் எம் பி சத்தியபாமா, நம்பியூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தம்பி என்கின்ற சுப்பிரமணியம், டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் ஹரி பாஸ்கரன், எலத்தூர் பேரூராட்சி செயலாளர் சேரன் சரவணன், காசிபாளையம் பேரூராட்சி செயலாளர் மணி என்கின்ற சந்திரசேகர், குருமந்தூர் ஊராட்சி தலைவர் மணி என்கின்ற சந்திரசேகர், ஒன்றிய குழு கவுன்சிலர் அனுராதா, கலிங்கியம் கோகிலா, அருள் ராமச்சந்திரா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுலோசனா மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து
கொண்டனர்.