அதே போன்று இந்த 2023 ம் புத்தாண்டிலும் சிறப்பான முறையில் பணியாற்றி நகராட்சிக்கு நல்ல பெயரை பெற்று தர பாடுபடுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது, அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு சென்றிட பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவதாகவும், நகர் மன்றமும் பணியாளர்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் என்றும் உறுதி அளித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் ராஜேஷ், மேலாளர் ஜோதிமணி, கணக்காளர் பழனியப்பன், துப்புரவு அலுவலர் சோழராஜ், கணினி உதவி திட்ட அமைப்பாளர் செந்தில் நாதன், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார் கார்த்திக் சௌந்தரராஜன் நகர அமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.