Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட அளவில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் ...

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அவ்வகையில் இவ்வாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட அளவில் அனைத்து உட்கோட்டங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் உட்கோட்ட அளவில், அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுவர் மன்றத்தில் உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
 குழந்தைகளுக்கு கோ கோ, கபாடி, ஓட்டபந்தயங்கள் மற்றும் மாணவர்களுக்கு கைப்பந்து, கிரிக்கெட், கபாடி போட்டி போன்ற விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
பின்பு பெரியவர்கள் கலந்து கொண்ட கிரிக்கெட், கபாடி மற்றும் கைப்பந்து போட்டிகள்  ஆகியவை மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களும் தேர்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல் 14.01.2023 ம் தேதியன்று ஈரோடு ஆயுதப்படை மைதானத்திலும், பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. 
அங்கு வந்திருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. உரியடிக்கும் போட்டியில் காவல் அதிகாரிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
உட்கோட்ட அளவில் ஏற்கனவே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளின் இறுதியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.சசிமோகன், I.P.S., அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கியும், காவல் துறை சார்பாக  அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொண்டார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.