இக்கண்காட்சியில் ஐம்பொன் சிற்பங்கள், பித்தளை விளக்குகள் தஞ்சை ஓவியங்கள், தஞ்சை கலைத்தட்டுகள், சந்தன மரச்சிற்பங்கள் கற்சிற்பங்கள் வெள்ளை மற்றும் கருப்பு உலோகத்திலான சிற்பங்கள், வலம்புரி சங்குகள், 1 முதல் 14 முகம் வரையிலான ருத்ராட்சம், வாஸ்து உருளிகள் காமதேனு, கோமாதா, குபேர விளக்குகள், அகர்பத்திகள், வாசனை திரவியங்கள் மற்றும் சந்தன கட்டைகள், எண்ணற்ற பூஜைப் பொருட்கள் மொராதாபாத் கலைப் பொருட்கள் ஜெய்பூர் வண்ண ஓவியங்கள். ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்கள் சகரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள், சென்னா பட்டனா பொம்மைகள் ஜெய்பூர் நவரத்தின கற்கள், முத்து நகைகள், இராசிக்கேற்ற இராசிக்கற்கள். ஐம்பொன் வளையல்கள் கொலுசுகள் அமெரிக்கடைமன் நகைகள் மற்றும் எண்ணற்ற பரிசுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் ரூபாய் 50/-முதல் 50000/- வரையிலான புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கண்காட்சி பரிசுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும் பூம்புகாரில் அனைத்து கடன் மற்றும் பற்று அட்டைகளுக்கு எவ்வித சேவை கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பொருட்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.