இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது,
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், எனவே இந்த தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெறும் எனவும்,
நாளை பணிமனையை திறக்கப்படவுள்ளது அதனை தொடர்ந்து விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என்றும் கூறினார் .
மேலும் , ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து 20 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்களுக்கு முறையாக வாக்குச்சீட்டுகளை வழங்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும், இறந்து போன ஐந்தாயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் இது குறித்து அதிகாரிகள் முறையாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.