அதில்,
வருகிற அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளை
முன்னிட்டு காலை 9.00 மணியளவில் மணல்மேட்டில் உள்ள மாவட்ட கழக
அலுவலகத்திலும் பெரியார்நகர் முகாம் அலுவலகத்திலும் அறிஞர் அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
மாண்புமிகு அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரவர்கள் பணிபுரியம் இடங்களிலேயே படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம் எனவும், இதற்காக கழக நிர்வாகிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று அன்புடன் கேட்டுகொள்கிறேன் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.