இந்நிகழ்ச்சியில் பவானி துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், காவலர்களுக்கான உறியடித்தல், லக்கி கார்னர் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
காவல் உதவி ஆய்வாளர்களான திரு. கோவிந்தராஜ், திருமதி. கஜலட்சுமி ஆகியோர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் பழனிச்சாமி, ஜெபஸ்டின், லீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் இரு சாய் வேம்பத்தி திமுக ஒன்றிய கவுன்சிலர் வையாபுரி மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.