நாமக்கல் மாவட்டத்தில், 830 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
February 11, 2023
0
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, கனம் கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு. அருண் I.P.S அவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசி, மண்ணெண்ணய், கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குவது சம்மந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று வழங்கிய உத்தரவின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, கோயமுத்தூர் மண்டல காவல் கண்காணிப்பாளர் திரு. பாலாஜி அவர்களின் அறிவுரைப்படியும், ஈரோடு உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு. சுரேஷ்குமார் அவர்களின் மேற்பார்வையிலும், ஈரோடு அலகு காவல் ஆய்வாளரின் மேற்பார்வையிலும் 11.02.2023 இன்று நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் திரு. சதீஷ்குமார் மற்றும் போலீஸ் பார்ட்டி சகிதம் நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி அருகில் ரோந்து செய்து கொண்டிருந்த போது கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் வளையப்பட்டி பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ணபிள்ளை என்பவரது வீட்டில் சென்று சோதனை செய்த போது அங்கு சுமார் 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த கருப்பண்ணபிள்ளை என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.