சத்தியமங்கலம் தனியார் கூட்ட வளாகத்தில், ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இந்துமுன்னணி மாவட்ட தலைவர் குருசாமி அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்துமுன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும்
ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியினைச் சார்ந்த மாவட்ட, நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சத்தி நகர, ஒன்றிய இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.