அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தலைமையில் வாக்கு சேகரிப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.
February 18, 2023
0
17.02.2023 இன்று, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து, ஈரோடு முனிசிபல் காலனி பாப்பாத்திக்காடு பகுதியிலுள்ள 198 வது பூத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தலைமையில் வாக்கு சேகரிப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் டி சி மணி அவர்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.