திமுக விவசாய அணி சார்பில் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உள்ள வசந்தம் ஹால் மண்டபத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் மாநில விவசாய அணி துணைத் தலைவர் இரா. தமிழ்மணி மற்றும் மாநில விவசாய அணி துணைத் தலைவர் எஸ் கே வேதரத்தினம் (Ex.MLA) ஆகியோர் தலைமையில்,
மாநில விவசாய அணி இணைச் செயலாளர்களான கள்ளிப்பட்டி மணி மற்றும் குறிஞ்சி N. சிவக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் டெல்லி சிறப்பு பிரதிநிதி மற்றும் கழக மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
விவசாய அணி இணைச் செயலாளர் எல். தர்மலிங்கம் (Ex.MLA) நன்றியுரை ஆற்றினார்.


இந்த கூட்டத்தில் திமுக விவசாய அணி மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.