கலிங்கியம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிகம்பத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது
March 30, 2023
0
கழக தலைவர் தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாள் (மார்ச்) முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. N. நல்லசிவம் அவர்களின் வழிகட்டுதல்படி, கோபி தெற்கு ஒன்றியம் கலிங்கியம் ஊராட்சியில் பழைய வள்ளியம்பாளையம் கிளை கழக செயலாளர் திரு. முருகன் அவர்களின் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிகம்பத்தில் கோபி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சரஸ்வதி குமாரசாமி அவர்களின் முன்னிலை வகிக்க, ஒன்றிய கழக செயலாளர் திரு. சிறுவலூர் S.A. முருகன் அவர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் கோட்டுப் புள்ளாம்பாளையம் தொடக்க வேளாண் வங்கி தலைவர் K.V. சின்னுச்சாமி, ஒன்றிய கழக துனை செயலாளர் KC மூர்த்தி, கலிங்கியம் ஊராட்சி குமாரசாமி, K.P. கைலாஷ் குமார், முன்னாள் யூனியன் கவுன்சிலர் களீஸ்வரன் சம்பத், கோட்டுப்புள்ளாம் பாளையம் ஊராட்சி கிளை செயலாளர்கள் KV ஈஸ்வரமூர்த்தி, மசையப்பன், கருப்பன், அய்யப்பன், பாலு, சின்னப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.