கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்களை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் அவர்களின் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில் குமார், கார்த்திக், சௌந்தரராஜன் ஆகியோர் மொடச்சூர் ரோடு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் ரெய்டு நடத்தினர். மேற்படி ரெய்டில் கடைகளில் இருந்து சுமார் 5,000 மதிப்பிலான பிளாஸ்டிக் ஸ்பூன், நான் ஓவன் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்ததுடன், ரூபாய் 5,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற பிளாஸ்டிக் ரெய்டு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ரெய்டு...
March 30, 2023
0