தட்டப்பள்ளி வாய்க்காலில் பாலம் அமைக்க பூமி பூஜை போடும் விழா...
March 25, 2023
0
மாண்புமிகு முதல்வர் அவர்களின் நல்லாட்சியில் பாரியூர் வெள்ளாளபாளையம் ஊராட்சி சாணார்பதியில் பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையான மயானத்திற்கு செல்லும் பாதையில் தட்டப்பள்ளி வாய்க்காலில் பாலம் அமைக்க பூமி பூஜை போடும் விழா இன்று கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன் அவர்களின் தலைமையில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு என் நல்லசிவம் அவர்களின் முன்னிலையில், மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கோபி நகர மன்ற தலைவர் திரு என் ஆர் நாகராஜ் அவர்களும், ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திரு கே கே செல்வம் அவர்களும், மாவட்ட பிரதிநிதி திரு சீனிவாசன் அவர்களும், நஞ்சை கோபி வெ கணேசன் அவர்களும், அபிராமி, வெங்கிடு, கிருபாகரன், முருகன், தேவராஜ், வேங்கை முத்து, குமாரசாமி உள்ளிட்ட கழகத் தோழர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.