நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (Under urade Union Act 1926) சார்பில் அதன் தலைவர் டாக்டர் கா. குமார் அவர்கள் (27-03-2023) அன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில இணைச்செயலாளர் ஜி.கே.ராஜா, பொதுக்குழு தலைவர் சி.கே.ராஜன், மாநில துணைச் செயலாளர் ஜெ.பிரேம்குமார், மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கருணாகரன், மாநில ஆலோசகர் யூசப், தமிழக மேற்கு மண்டலத் தலைவர் ஈ.தனஞ்ஜெயன், மண்டல இணைச் செயலாளர் என். முருகானந்தம் மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து வழங்கினர்.
இதில் செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் (Tamil Nadu Legislative Assembly) செய்தி மக்கள் தொடர்புதுறையின் மானிய கோரிக்கையின் போது நிறைவேற்றி தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு செய்தியாளர்களின் வாழ்வு வளம்பெற செய்ய வேண்டும் என்று ஓய்வூதியம் உயர்வு, பாதுகாப்பு, கல்வி உதவி, தாலுகா செய்திதுறையினருக்கு அரசு நல திட்டங்கள் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றிய கோரிக்கை மனு அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
அப்போது மரியாதை நிமித்தமாக நினைவு பரிசையும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக தலைவர் டாக்டர் கா.குமார் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்கினர்.
செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைவர் டாக்டர் கா.குமாரிடம் கோரிக்கை மனுவை பரிசீலிப்பதாக நம்பிக்கை அளித்தார். மேலும் செய்திதுறையில் நிலவும் நிறை குறைகள், சமூகத்தில் நிலவும் சவால்கள் குறித்து அமைச்சர் முன்னதாக அலசி ஆராய்துள்ளார். அதுகுறித்தும், செய்தி துறை சார்ந்தவர்களுக்கு ஏற்படும் இடர்கள் குறித்தும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் மற்றும் நிர்வாகிகளிடம் உரையாடினார். செய்திதுறை அமைச்சர் உரையாடலை கண்டு நிர்வாகிகள் மிகவும் வியப்படைந்தனர். மேலும் தலைவர் டாக்டர் கா.குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் அமைச்சர் மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களிடம் தங்களது மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.