ஈரோட்டில் 2008 ஆம் ஆண்டு முதல்
ஷோரி காய் இண்டர்நேஷனல் கராத்தே - டோ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் வெட்டுக்காட்டு வலசு பகுதியில் இயங்கி வரும் ஜெயம் இண்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் அகாடமியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலிங்கா பள்ளியின் முதல்வர்.திருமதி ரூபா அச்சுதன் அவர்கள் கலந்து கொண்டு தற்காப்புக்கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஷோரி காய் கராத்தே - டோ அமைப்பின் நிறுவனர் சென்சாய் திரு. R. சுரேஷ் இவ்விழாவைத் தலைமையேற்று நடத்தினார்.
இத்திறனாய்வுத் தேர்வில் ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
சென்சாய் H. ஷேக் அலாவுதீன் பாஷா, சென்சாய் M. குமார், சென்சாய். V. கோகுல் நாத் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இவ்விழாவின் இறுதியாக இவ்வமைப்பின் தேசிய தலைமைப் பயிற்சியாளர் R. சுரேஷ் அவர்கள் இத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் வண்ணப் பட்டயங்களையும், கருப்புப்பட்டயங்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.