கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தலைமையில் நகராட்சி மேலாளர் ஜோதிமணி மற்றும் துப்புரவு அலுவலர் சோழராஜ் முன்னிலையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பெண் பணியாளர்கள் கேக் வெட்டி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் மகளிர் தினத்தின் சிறப்புகளையும் மகளிர் தனிச்சிறப்புகளையும் பேசி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் தனது உரையில், அனைத்து துறைகளிலும் மகளிரின் பணி பாராட்டத்தக்க வகையில் சிறந்து விளங்குகிறது. தற்போதுள்ள நகர மன்ற உறுப்பினர்களில் 50 சதவீதம் மகளிர் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் சிறந்த பணியாற்றி வருவதாகவும், அலுவலகத்திலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர். அவர்களும் ஆண்களுக்கு இணையாக சிறப்பாக பணிபுரிந்து வருவதாகவும் கூறி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து, பெண் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். துப்புரவு ஆய்வாளர் கார்த்திக், கணக்காளர் பழனியப்பன், உதவி பொறியாளர் பிரேமா, பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், உதவி திட்ட அமைப்பாளர் செந்தில் நாதன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் இளநிலை உதவியாளர் ரிஸ்வான் நன்றி தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம்
March 09, 2023
0