பல்வேறு துறைகளில் இருந்து சுமார் 570 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வடிவமைப்புகள் இடம் பெற்ற, பொறியியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி – 2023 வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 12.04.2023ம் தேதியன்று நடைபெற்றது.
இதில் பெங்களூர் மன்யாதா டெக்பார்க்கில் உள்ள KYNDRYL சொல்யூஷன்ஸ் பிரைவேட். லிமிடெட் டின் இணை இயக்குனர்மற்றும் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் திரு. என். மிதுன் சக்கரவர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். செயலாளரும், நிருபருமான திரு. எஸ். டி. சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் டாக்டர் எம்.ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார் மற்றும் புலமுதல்வர் P.ஜெயசந்தர் துறைத்தலைவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.