கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு வாஸ்து நகர் பகுதியில் அமைந்துள்ள பூங்காவினை தூய்மைப்படுத்தும் பணிகளை நகர மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் தொடங்கி வைத்தார்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று 15 வது வார்டு வாஸ்து நகர் பகுதியில் அமைந்துள்ள பூங்காவினை தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி பணியாளர்கள், வாஸ்து நகர் குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோர் அப்பகுதியில் வாழும் பொதுமக்களுடன் இணைந்து பூங்காவினை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சிவக்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் ராமு, மூர்த்தி, மகேஸ்வரி, செல்வி, இந்திரா, சண்முகம், குமார், சீனிவாசன், சரோஜா, பிரகாஷ், செல்வி, வாணிஸ்ரீ, வேலுமணி, சவுரியம்மாள் ராஜா, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தர்ராஜன், சமுதாய அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பூங்கொடி, விஜயன், செல்வகுமார், விசுவநாதன், பழனிச்சாமி மற்றும் தூய்மை பாரத திட்ட பரப்பரையாளர்கள் மஞ்சுநாதன், கிருஷ்ணன், அருள் பிரசாத், சத்யா, வைஷ்ணவி, பூங்கொடி, காளியம்மாள், அருண், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி, ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.