ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் ஆண்டு விழா "டெக்பிரீஸ் - 2K23" நந்தா தொழிநுட்ப வளாகத்தின் கலைஅரங்கில் இனிதே நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை ஈரோடு சிக்கநாயக்கர் கல்லூரி தமிழ்த்துறையின் உதவி பேராசிரியாரும், பேச்சாளருமான முனைவர் இரா.விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இவர்களுடன் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், கல்லூரி முதல்வர் முனைவர் ச.நந்தகோபால் அவர்கள் நடப்பு ஆண்டுகளின் போது நடைபெற்ற நிகழ்வுகள் அடங்கிய ஆண்டறிக்கையினை வாசித்தார்.
மேலும் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி டாக்டர் எஸ். ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குனர் முனைவர் செந்தில் ஜெயவேல் மற்றும் நிர்வாக அதிகாரி ஏ.கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் ஈரோட்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற அரசு பள்ளிகளுக்கு இடையேயான கலை திருவிழா, விளையாட்டு மற்றும் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்று முதல் ஆறு இடங்களை தக்க வைத்துக் கொண்ட மாணவ-மாணவியர்களான மோலபாளையம் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் நகுல், அ.பள்ளிபாளையம் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி தனுஜா, காசிப்பாளையம் பள்ளியின் பிளஸ் 2 மாணவர் ஸ்ரீசாந்த், பொன்னாத்தாவலசு பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி சிந்துஜா, ஊசிமலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் ஐயப்பன், பி.பெ. அக்ரஹாரம் பள்ளியின் மாணவன் சையது இப்ராகிம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இவர்களை பெருமைபடுத்தும் விதமாக நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் மற்றும் முனைவர் இரா.விஸ்வநாதன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். இவர்கள் அனைவரும் அரசின் சார்பில் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பித்தக்கது.
இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ஈரோடு மாநகராட்சியின் ஆணையர் பி. ஜானகி ரவீந்திரன் அவர்கள் நடந்து முடிந்த பருவத்தேர்வுகள் மற்றும் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களில் நுறு சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி உரையாற்றினார். அப்போது கூறுகையில், மாணவர்கள் சமூகத்தில் தனது பொருப்புணர்வினை புரிந்துக் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மாணவர்கள் ஒவ்வொருவரும் தனது பொருப்புணர்வினை உயர்ந்து தன்னாலான உதவிகளை நமது சமூகத்திற்கு செய்திட முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடந்து நடைபெற்ற மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சியில் பிரபலங்கலான கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன், பழனி பட்டாளம் மற்றும் பிக்-பாஸ் புகழ் செல்வி ஜனணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கு
கொண்டு, பல்வேறு நடன கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.