வேளாளர் மகளிர் கல்லூரியின் 53 – வது ஆண்டு விழா 06.04.2023 இன்று கஸ்தூரிபா கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊட்டச்சத்து மற்றும் உணவு திட்டவியல் துறை தலைவர் முனைவர் N.சபிதா அவர்கள் வரவேற்புரை நல்கினார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் திரு.செ.து. சந்திரசேகர் அவர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் முனைவர் செ.கு. ஜெயந்தி அவர்கள் தலைமை விருந்தினரை கெளரவித்தனர். இவ்விழாவிற்கு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி திருமதி C.சந்தோஷினி சந்திரா அவர்கள் சிறப்புரையாற்றினார். தன் உரையில் மாணவிகள் உயர் பதவிக்கு செல்லும் குறிக்கோளுடன் தன்னம்பிக்கையோடு செயல்படவேண்டும் என்றும், அரசுத்தேர்விற்குத் தங்களைத் தயார்படுத்தி கொள்ளும் வழிமுறைகளையும், நாளைய இந்தியாவின் தலைவர்களாக வலம் வரவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
வேளாளர் மகளிர் கல்லூரியின் 53 – வது ஆண்டு விழா 06.04.2023 இன்று நடைபெற்றது.
April 06, 2023
0
Tags