கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் வைர விழா மேல்நிலைப்பள்ளியில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் உத்தரவின் படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பைகளை பிரித்து வழங்குவதன் மூலம் அவற்றை எவ்வாறு உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் அவைகள் எவ்வாறு மறுசுழற்சிக்கும் மறு பயன்பாட்டிற்கும் அனுப்பப்படுகிறது என்பது பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். குப்பைகளை பிரித்து வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.