பாரியூர் அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
April 26, 2023
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாரியூர் அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் மிகப் பழமையான பிரதிஷ்டை பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக விழா நடைபெறும். இக்கோயில் பாரியூர் அம்மனை மிக சக்தி வாய்ந்த தெய்வமாக கருதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கோபி செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். இந்த விழாவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.