கோபிசெட்டிபாளையத்தில் கே ஏ செங்கோட்டையன் நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்தார்...
April 27, 2023
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாளையம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பிறகு கோபிசெட்டிபாளையம் கிராமத்தில் ஒன்பது லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் துவங்கி வைத்தார். மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒன்பது லட்சம் செலவில் குப்பை எடுக்கும் பேட்டரி இயந்திரத்தை அலிக்குழி ஊராட்சிக்கு வழங்கினார். இதில் செய்தியாளருக்கு கூறியதாவது - அவிநாசி அத்திக்கடவு திட்டமானது மக்களின் 20 ஆண்டுகால கனவு ஆகும், இது கடத்த அதிமுக ஆட்சியின் போது துவக்கப்பட்டது என்றும் நம்முடைய ஆட்சியில் தான் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டது என்றும் கூறினார். உடன் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், ஊராட்சி தலைவர் இந்துமதி பாண்டுரங்கசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்தியபாமா, கோபி நகரச் செயலாளர் பிரியோ கணேஷ், மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.