கோபிசெட்டிபாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் விரைந்து முடிப்பது குறித்தும், மின்கம்பங்கள் மாற்றி அமைக்கபட உள்ளதால் மின் நிறுத்தம் குறித்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நகர ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுநல அமைப்புகள், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் சாலை விரிவாக்கத்தில் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கபட உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கபடமாலிருக்கும் வகையில் சாலைகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், 9 நாட்களுக்கு நகர பகுதிகளில் பகுதியில் மின்தடை ஏற்படுவது குறித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு பலவேறு ஆலோசனைகளை வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் -
சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் நேரத்தில் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முறையான போக்குவரத்து மாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை இனி வரும் காலங்களில் நெடுஞ்சாலை துறையினர் முறையான அறிவிப்பு பலகைகளை வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,
மின்சார வாரியத்தின் மூலம் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் போது குறித்த நேரத்தில் மீண்டும் மின் விநியோகத்தை வழங்கிட வேண்டுமென மின் வாரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்துவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.