Type Here to Get Search Results !

குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10 வகுப்பு பொதுத் தேர்வில் நம்பியூர் அளவில் சிறப்பிடம்.

2023 ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற V. ஹரிணி என்ற மாணவி பாடவாரியாக  தமிழ்-98, ஆங்கிலம்-99,  கணிதம்-99,  அறிவியல்-100, சமூக அறிவியல்-94 என்ற முறையில்  490/500  மதிப்பெண்களைப் பெற்று நம்பியூர் அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.  மேலும் K S தினேஷ் கார்த்திக் என்ற மாணவன் 485/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும்,  V D நேத்ரா என்ற மாணவி 484/500 மதிப்பெண்களைப் பெற்று பள்ளி அளவில் 3 ம் இடமும் பெற்றுள்ளார்கள்.
 மேலும் தேர்வு எழுதிய மாணவர்களில் கணிதத்திலும் அறிவியலிலும் 100க்கு100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் திரு. K.A ஜனகரத்தினம் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்.  துணை தாளாளர் சுகந்தி,  பள்ளியின் செயலர் டாக்டர் அரவிந்தன்,  இணைச் செயலாளர் டாக்டர் மாலினி,  பள்ளியின் முதல்வர் மஞ்சுளா,  துணை முதல்வர் வசந்தி,   ஆகியோர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.