Type Here to Get Search Results !

17 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன......


ஈரோடு மாவட்டம், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (16.02.2026)
மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
திரு.சு.முத்துசாமி அவர்கள் குடிமைப்பணி பயிற்சி மையம், நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிபொறுப்பேற்ற பொதுமக்களின்நலனுக்காக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டினை முன் மாதிரி மாநிலமாக உயர்த்தி உள்ளார்கள். இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்றைய தினம், ஈரோடு மாவட்டத்திற்கு உயர்கல்வித்துறையின் சார்பில் ரூ.4608.42/- கோடி மதிப்பீட்டிலான
புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். அந்த வகையில் இன்றைய தினம், ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.940.70/- லட்சம் மதிப்பீட்டில் குடிமைப்பணி பயிற்சி மையம், நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்தல், நம்பியூர் திட்டமலை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.430.00 /-இலட்சம் மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கட்டிடம் கட்டுதல், அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.1799.72/- இலட்சம் மதிப்பீட்டில் நிரந்தர கட்டிடம் கட்டுதல்,
ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.288.00/- இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு அரங்குகள் கட்டுமானப்பணிகள், ஈரோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் ரூ.1150.00/- இலட்சம் மதிப்பீட்டில் மாணவியர்கள் விடுதி கட்டுவதற்கு ஆகிய புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5000 வழங்கியுள்ளார். இத்தொகையினை பெற்ற பெண்கள் பெருமகிழ்ச்சியோடு உள்ளனர். மேலும் கனிராவுத்தர் குளத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், போக்குவரத்துத்துறையின் சார்பில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க பல்வேறு புதிய பேருந்துகளின் சேவையையும், புதிய வழித்தடங்களையும் வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு அரசால் ஈரோடு மாவட்டத்திற்கு 2021-2026-ஆம் ஆண்டு வரை 59 புதிய நகரப் பேருந்துகள் மற்றும் 87 புதிய புறநகர் பேருந்துகள் என மொத்தம் 146 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 17 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேருந்துகளானது ஈரோடு - வேலுார், கோயம்புத்துார், மதுரை, இராமேஸ்வரம், குமளி, சிவகாசி, மைசூர், கம்பம் வழிதடத்திலிருந்தும், மேலும், அந்தியூர்-கம்பம்,சென்னை,நாகர்கோயில், வழி தடத்திலும், சத்தி - கொடைக்கானல், கோபி- திருச்செங்கோடு, ஆகிய வழி தடங்களில் இப்பேருந்து சேவையானது இயங்கும். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான இப்பேருந்து வழித்தடம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. 

தொடர்ந்து, இன்றைய தினம், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் 70 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி 
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம்) (பொ) செல்வக்குமார், சிக்கய்ய அரசு கலை கல்லுாரி முதல்வர் திருக்குமரன், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் உட்பட கல்லுாரி முதல்வர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.