ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில்
கொங்கர்பாளையம் மற்றும் புள்ளப்பநாயக்கன்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் 94.39 இலட்சம் மதிப்பீட்டில், 2023- 24 ஆம் ஆண்டிற்கான #AGMT பணிகளை
17.08.2023 நேற்று கொங்கர்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி R.ஜானகி அவர்கள், புள்ளநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பாஸ்கரன் ஆகியோர் அடிக்கல் நாட்டித் பணியை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், மாவட்ட அவைத் தலைவர் ஏ.பெருமாள்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் TK.சுப்ரமணியம் அவர்கள், மாவட்ட பொருளாளர் கே.கே.சண்முகம் அவர்கள், ஒன்றிய கழகச் செயலாளர் எம்.சிவபாலன் அவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.